ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை! - இலங்கை தேயிலை சபை

Reha
2 years ago
ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை! - இலங்கை தேயிலை சபை

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரையில் பிரச்சினை ஏற்படவில்லையென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்கான கட்டணத்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொடவை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈராக். துருக்கியை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. 2021ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு 29 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதன் பெறுமதி 24, 822 மில்லியன் ரூபாவாகும். யுக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யாவுக்கான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்தநிலையில் உலக வங்கியின் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையில் ரஷ்யாவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.