எட்டு நிலக்கரி கப்பல்களுக்கு டொலர் நெருக்கடி.. 900 மெகாவாட் அபாயத்தில் நுரைச்சோலை!

Prathees
2 years ago
எட்டு நிலக்கரி கப்பல்களுக்கு டொலர் நெருக்கடி.. 900 மெகாவாட் அபாயத்தில் நுரைச்சோலை!

நிலக்கரி ஏற்றிச் செல்லும் எட்டு கப்பல்களை அடுத்த மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும், தேவையான டொலர்களை விடுவிப்பதில் மத்திய வங்கி சவாலை எதிர்நோக்கியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த போதிலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பருவத்திற்கு முன்னதாக எட்டு கப்பல்களில் இருந்து நிலக்கரியை இறக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பில்  இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா  கருத்து வெளியிடுகையில், 

இந்த எட்டு நிலக்கரி கப்பல்களை அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கடன் கடிதங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான சுமார் நான்கரை மில்லியன் டன் நிலக்கரி இந்த எட்டு கப்பல்களிலும் இருப்பதாக தலைவர் கூறினார்.

இருப்பினும்இ நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது 2.25 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி இருப்பு உள்ளதால், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் இறக்குமதியும் டொலரால் தடைபடும் நேரத்தில் நிலக்கரி இறக்குமதியை பாதித்தால் 900 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மூடப்படலாம் என்று மின் பொறியாளர்கள் கூறுகின்றனர்.