உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ள ஜப்பான் கோட்டீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி

Keerthi
2 years ago
உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ள ஜப்பான் கோட்டீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்த பிறகு, ரஷியா மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியா மீது தடைகளை விதித்து வருகிறது. பல நாடுகள் ரஷியா தங்களது வான்வெளியை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நிதியுதவியும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜப்பான் உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிதி அளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஜப்பான் கோட்டீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி என்பவர் உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார்.

இதுகுறித்து ஹிரோஷி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உக்ரைனில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனிதாபிமானம் அடிப்படையில் 8.7 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்குகிறேன்.

ரஷ்யாவும் உக்ரைனும் இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்றும், உக்ரைன் மக்கள் கூடிய விரைவில் மீண்டும் அமைதி பெற முடியும் என்றும் நம்புகிறேன்.

எனது எண்ணங்கள் உங்களுடனும் உக்ரைன் மக்களுடனும் எப்போதும் இருக்கும். நியாயமற்ற சக்தியால் உக்ரைனை மிதிப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.