அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 28.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 28.02.2022

மேஷம்:

அசுவினி: பணியிடத்தில் இருந்த சிரமங்கள் விலகி நிம்மதி ஏற்படும்.
பரணி: ஏமாற்றங்கள் தொடரும். பணியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.
கார்த்திகை 1: வாகன வகையில் செலவு ஏற்படும். வம்புகளில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: எதிர்பாராத நிகழ்வால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நன்மை உண்டு.
ரோகிணி: தாதமங்களை தவிர்க்க இயலாது. வீண் பழி ஏற்படாமல் தப்புவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: யோகம் உண்டாகும். குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை: வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை சேர்க்க வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர்.

கடகம்:

புனர்பூசம் 4: குழந்தைகள் தங்களுடைய பொறுப்பை அறிந்து செயல்படுவர்.
பூசம்: புதிய வாகனம் வாங்குவீர்கள். அதன் மூலம் லாபம் கிடைக்கும்.
ஆயில்யம்: சமீபத்தில் மாறியிருக்கும் வீடு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது.

சிம்மம்:

மகம்: எதிர்பாராதவை நிகழும். குழந்தைகளால் பிரச்னைகள் ஏற்படும்.
பூரம்: கூடுதல் வருமானம் மகிழ்ச்சி அளிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
உத்திரம் 1: மேலதிகாரிகளை அனுசரித்து சென்று நிம்மதி காண்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: உறவினர்கள் இடையே இருந்து வந்த பிரச்னை தீரும்.
அஸ்தம்: யாருடனும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
சித்திரை 1,2: நிலுவைப் பணிகளை செய்து முடித்து நிம்மதி அடைவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பிறரை நம்பி எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம்.
சுவாதி: மேலதிகாரிகளுடன் மகிழ்ச்சியான உரையாடல் உண்டு.
விசாகம் 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுவார்த்தையில் இருந்த தாமதம் நீங்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: மற்றவர்களை அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.
அனுஷம்: நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
கேட்டை: பணவரவு அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

தனுசு:

மூலம்: சலிப்பும் கவலையும் தீரும். தடைகளை கண்டு தளர மாட்டீர்கள்.
பூராடம்: சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.
உத்திராடம் 1: பணவரவு தடைபடாது. பங்குதாரர் மூலம் நிம்மதி கிடைக்கும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: வருத்தம் நீங்கும். எதிர்காலக் கவலை தீரும்.
திருவோணம்: முயன்ற விஷயங்கள் தாமதமானாலும் அது நல்லபடியாக முடியும்.
அவிட்டம் 1,2: சகபணியாளர்களுடன் இருந்து வந்த பிரச்னை தீரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பிரச்னை தீரும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சதயம்: பண விவகாரங்களில் இருந்த அதிருப்தி நீங்கும். முயற்சியில் வெற்றி உண்டு.
பூரட்டாதி 1,2,3: மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உத்திரட்டாதி: நிம்மதி கூடும். தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி: குழந்தைகளுக்கு உங்களின் ஆலோசனைகள் உதவும்.