டீசல் கேட்டு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகள்.. பொலிஸார் வரவழைப்பு..

Prathees
2 years ago
டீசல் கேட்டு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகள்.. பொலிஸார் வரவழைப்பு..

மஸ்கெலியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று ஹட்டனில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தமது வாகனத்திற்கு டீசல் வழங்குமாறு கோரி அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளனர்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக  சென்ற இளைஞர்கள் குழு,  27ஆம் திகதி கண்டிக்குச் சென்று 28ஆம் திகதி ஹட்டன் ஊடாக மஸ்கெலியா வுக்கு விஜயம் செய்வதற்காக ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்இ வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து போனதால் எரிபொருள்  நிரப்பச் சென்றுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களிடம் எரிபொருள் கேட்டபோதுஇ ​​அத்தியாவசிய சேவைகளுக்காக குறைந்த அளவு டீசல் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு 20 லீற்றர் டீசல் மாத்திரமே வழங்குமாறு குறித்த  இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிராகரித்ததால் அங்கு வருகை தந்த இளைஞர்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஹட்டன் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரின் தலையீட்டின் பேரில் பொகவந்தலாவ பகுதியில் தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் தம்மிடம் இருந்த 20 லீற்றர் டீசலை இளைஞர்களிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.