அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 01.03.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 01.03.2022

மேஷம்:

அசுவினி: நீங்கள் வாழ்வில் முன்னேறுவீர்கள். பேச்சில் கவனம் தேவை.
பரணி: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடித்துவிடுவீர்கள்
கார்த்திகை 1: முயற்சியில் ஏற்பட்டிருந்த தடை நீங்கும். நேர்மை கூடும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நண்பர்கள் மூலம் நீங்கள் விரும்பிய சுபச்செய்திகள் வரும்.
ரோகிணி: செலவினங்கள் அதிகரிக்கும். யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் குடும்ப எதிரியைத் திறம்பட எதிர்கொண்டு வெல்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும்.
திருவாதிரை: முந்தைய நாளில் இருந்து வந்த மன உளைச்சல் தீரும்.
புனர்பூசம் 1,2,3: பேச்சினால் பிரச்னை வராமல் இருக்க கவனமாக இருங்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: கோபத்தை அடக்கி அனுசரிக்க நன்மை உண்டாகும்.
பூசம்: கால தாமதமாகக்கூடும். பொறுமைக்குப் பரிசு கிடைக்கும்.
ஆயில்யம்: உங்களது வாழ்வில் நல்ல திருப்பம் உண்டு.

சிம்மம்:

மகம்: செலவுகள் குறையும். கருணை மிக்க சிந்தனைகள் கூடும்
பூரம்: தனிப்பட்ட முறையில் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
உத்திரம் 1: வியாபாரிகளுக்கு சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகரமான விஷயம் நடக்கும்.
அஸ்தம்: பணியாளர்களுக்கு மேலதிகாரியை பற்றி இருந்த வருத்தம் நீங்கும்.
சித்திரை 1,2: மற்றவர்களிடம் கனிவாகப்பழகி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: வருமானம் பெருகும். நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.
சுவாதி: நீண்டகாலத் தடைகள் விலகி நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்
விசாகம் 1,2,3: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேற்றைய வருத்தங்கள் தீரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: உயர்ந்தோர் ஆலோசனையுடன் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அனுஷம்: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருப்பது நல்லது.
கேட்டை: உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

மூலம்: கடன் வாங்கும் முன் பலமுறை யோசித்துவிட்டு வாங்குங்கள்.
பூராடம்: வீட்டிலும், பணியிடத்திலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
உத்திராடம் 1: பணியாளர்களுக்கு உயர் அதிகாரியுடன் எதிர்பாராத சந்திப்பு உண்டு.

மகரம்:

உத்திராடம் 2,3,4: பணியிட ரகசியங்கள் கசியாமல் இருக்க கவனமாக இருங்கள்.
திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: சகிப்புத்தன்மை கூடும். பணியில் அலட்சியம் வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பயம் நீங்கும்.
சதயம்: உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
பூரட்டாதி 1,2,3: வேலையில் நிதானம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்

மீனம்:

பூரட்டாதி 4: தொழில், வியாபார விஷயத்திற்கான முயற்சிகள் தொடரும்.
உத்திரட்டாதி: கூடுதல் முயற்சியின் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் .
ரேவதி: அதிகம் உழைப்பீர்கள். நற்பலன் கிடைப்பதால் சிரமம் மறையும்.