நூறு அடிக்கு கீழே உள்ள பாறையில் ஜெர்மன் சுற்றுலாப்பயணியின் சடலம் மீட்பு: விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

Prathees
2 years ago
நூறு அடிக்கு கீழே உள்ள பாறையில் ஜெர்மன் சுற்றுலாப்பயணியின் சடலம் மீட்பு: விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

சிறிய ராவணன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாறையில்  வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரின் சடலம் நேற்று (27) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் நூறு அடிக்கு கீழே ஒரு பாறைக்கு கீழே விழுந்து கிடந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் லியோன்ஹார்ட் என்ற 33 வயது வெளிநாட்டவரின் சடலத்தை எல்ல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பிரதேசவாசி ஒருவர் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கிய தகவலையடுத்து வெளிநாட்டு பிரஜையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாப் பயணி சிறிய  ராவணன் அருவியை புகைப்படம் எடுக்க போகும் போது,  பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காலிங்க ஜயசிங்கவின் பணிப்புரைக்கமைய எல்ல பொலிஸ் பொறுப்பதிகாரியின்  மேற்பார்வையில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.