அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 02.03.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 02.03.2022

மேஷம்:

அசுவினி: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த கடன் வசூலாகும்.
பரணி: சுபநிகழ்ச்சி காரணமாக நெருங்கிய விருந்தினர் வருகை உண்டு.
கார்த்திகை 1: தள்ளிப்போன விஷயங்களை முடித்து நிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: பல பணிகளைத் திறம்பட செய்து பாராட்டு பெறுவீரகள்.
ரோகிணி: கைவிட்ட விஷயத்தில் புதுக்கோணத்தில் சிந்தித்து வெல்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத பாராட்டு காரணமாக சந்தோஷம் ஏற்படும்

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நியாயமான செலவினங்கள் அதிகரிக்கும். பயம் நீங்கும்.
திருவாதிரை: சிரமங்கள் தீரும். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பெண்கள் உதவி செய்வர். எதிர்பாராத நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கடகம்:

புனர்பூசம் 4: வெற்றி கிடைக்கும். உங்களின் புகழ் கூடும். பொறுப்பு அதிகரிக்கும்.
பூசம்: பொறுமையைக் கைவிட வேண்டாம். நல்ல செய்தி ஒன்று வரும்.
ஆயில்யம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.

சிம்மம்:

மகம்: நம்பியவர்கள் கைகொடுக்காமல் போனாலும் வெற்றி உண்டு.
பூரம்: கடந்த வார அலைச்சல் காரணமாக ஏற்பட்டிருந்த களைப்பு நீங்கும்.
உத்திரம் 1: பணியிட சிரமத்தைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள். பொறுமை கூடும்.
அஸ்தம்: போராடி லாபம் ஈட்டுவீர்கள் யாரையும் கேலி பேச வேண்டாம்.
சித்திரை 1,2: முனைந்து உழைப்பதால் மேலதிகாரியின் பாராட்டு உண்டு.

துலாம்:

சித்திரை 3,4: நெருங்கிய ஒருவர் செய்யும் உதவியால் நிம்மதி வரும்.
சுவாதி: திருப்தியான சூழ்நிலை ஏற்படும். புதிய மாற்றம் உருவாகும்
விசாகம் 1,2,3: மற்றவரிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: பிறரை பற்றி யாரிடமும் குறை கூற வேண்டாம்.
அனுஷம்: போட்டியில் வெல்வீர்கள். பணியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்
கேட்டை: சந்தோஷ அலைச்சல் உண்டு. உங்களது நோக்கம் வெற்றி பெறும்.

தனுசு:

மூலம்: யாருடனும் விவாதம் செய்ய வேண்டாம். பழி தரக்கூடிய செயலை செய்யாதீர்கள்.
பூராடம்: குடும்பம் பற்றிய கவலை வந்து நீங்கும். பயம் தீரும்.
உத்திராடம் 1: தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். கலையார்வம் மிகும்.
திருவோணம்: விழிப்பு தேவை. எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணலாம்.
அவிட்டம் 1,2: திட்டமிட்ட முயற்சி வெற்றி பெற கூடுதலாக உழைப்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மனமாற்றத்திற்கு ஏற்ப செயல்பாட்டை மாற்ற வேண்டாம்.
சதயம்: உங்களின் திட்டம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
பூரட்டாதி 1,2,3: பிள்ளைகளின் செயலால் மகிழ்ச்சியும், நிம்மதியும் கூடும்.

மீனம்:

பூரட்டாதி 4: புதியவர் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி: பணி பற்றிய முயற்சிக்கு மேலதிகாரிகள் உதவி செய்வர்.
ரேவதி: வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சி வெல்லும்.