பிரபல நாட்டின் ராக்கெட் திட்டம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

Keerthi
2 years ago
பிரபல நாட்டின் ராக்கெட் திட்டம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

ஈரான் நாட்டில் செயற்கை கோள்களுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சிதோல்வி அடைந்துள்ளது.

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளுடன் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அறிவித்தார். அந்த சமயத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இந்த திட்டங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் ஈரான் நாட்டின் செம்மான் மாநிலத்தில் இமாம் கொமேனி விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செயற்கை கோள்களுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சிதோல்வி அடைந்துள்ளது. இந்த செய்தி மேக்ஸார் டெக்னாலஜிஸ் செயற்கைக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தால் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

மேலும் ஏவுதளத்தில் ராக்கெட்டின் ஸ்டாண்ட் எரிந்து சேதம் அடைந்திருப்பதையும் அதனை வாகனங்கள் சுற்றி வந்ததையும் செயற்கைக் கோள் எடுத்த படத்தில் தெரிகிறது. இந்த நிலையில் ஏவுதல்கள் வெற்றிப்பட்டால் ராக்கெட் கேண்ட்ரிகளை சேதப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.