அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 05.03.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 05.03.2022

மேஷம்:

அசுவினி: எதிர்பாராத செலவு ஒன்று வந்தாலும் மனநிறைவு உண்டு.
பரணி: உறவினரால் எதிர்பாராத நன்மை வரும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த தொகை கைக்கு வர அதிகம் முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையும்.
ரோகிணி: சொத்து வாங்குவதில் சிறிய தடைகள் இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: நண்பரின் செய்கையால் குழப்பம் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணிகளில் அக்கறை செலுத்தி நன்மை அடைவீர்கள்.
திருவாதிரை: பொறுப்புடன் உழைப்பவர்கள் நல்ல திருப்பம் காண்பார்கள்.
புனர்பூசம் 1,2,3: யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அதுவே உங்களுக்கு நல்லது.

கடகம்:

புனர்பூசம் 4: நிதான முதலீடு நன்மை தரும். பேச்சினால் நன்மை வரும்.
பூசம்: சிலரின் தேவையற்ற போக்கு பற்றி வேதனைப்பட வேண்டாம்.
ஆயில்யம்: வீண் வாக்குவாதம் செய்யாமல் இருந்தால் பிரச்னை வராது.

சிம்மம்:

மகம்: மேலதிகாரி ஆதரவோடு நன்மை அடைவீர்கள். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
பூரம்: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
உத்திரம் 1: நண்பர்களின் உழைப்பில் உங்கள் ஒத்துழைப்பு இருக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியாளர்கள் இடமாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு வரும்.
அஸ்தம்: திட்டமிட்ட விஷயம் சிறு தடங்கலுக்குப் பின் சிறப்பாக நடக்கும்.
சித்திரை 1,2: பணியாளர்களின் ஒத்துழைப்பு தொழிலில் நன்றாக இருக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: சுபச்செலவுகளை மனதாரச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
சுவாதி: குடும்பத்தினரின் உழைப்பால் பணவரவுகள் அதிகமாகும்.
விசாகம் 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றித் திட்டமிடும் போது பதற்றம் வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம் 4: ஆன்மிகப்பயணம் மேற்கொள்ள விரும்பித் திட்டமிடுவீர்கள்.
அனுஷம்: வீண் பழிதரக் கூடிய நண்பர்களின் சேர்க்கை வேண்டாம்.
கேட்டை: நம்பிக்கையுடன் காத்திருந்த விஷயம் ஒன்று கனியும்.

தனுசு:

மூலம்: அலைச்சலும் பதற்றமும் இல்லாமல் எதையும் செய்ய முயற்சியுங்கள்
பூராடம்: சகிப்புத் தன்மை அதிகரித்து நன்மை காண்பீர்கள்.
உத்திராடம் 1: இன்று யாரிடமும் எதிர்மறையாக பேசாமல் இருப்பது நலம்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் அதிர்ஷ்டம் உண்டு.
திருவோணம்: மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி காண்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: யாருக்கும் பணம் தருவதாக வாக்கு கொடுக்க வேண்டாம்.
சதயம்: பல காலம் எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.
பூரட்டாதி 1,2,3: பெண்களால் நன்மை உண்டாகும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

மீனம்:

பூரட்டாதி 4: நேர்மறை எண்ணங்கள் ஏற்படும். பிறரை அனுசரித்து செல்வீர்கள்.
உத்திரட்டாதி: சிறிய இடர் ஒன்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ரேவதி: சிலரின் செயல்கள் உங்களது பொறுமையை சோதித்தாலும் சமாளிப்பீர்கள்.