வாரிசு நடிகரை ஹீரோவாக்கும் மணிரத்னம்..சினிமா துறையில் தடம் பதிக்கும் பிரபல வில்லனின் மகன் ..

Prabha Praneetha
2 years ago
வாரிசு நடிகரை ஹீரோவாக்கும் மணிரத்னம்..சினிமா துறையில் தடம் பதிக்கும் பிரபல வில்லனின் மகன் ..

 

தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் நடிகர்கள் ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றனர். அதிலும் சினிமா பின்புலத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது

அந்த வகையில் பிரபு, கார்த்திக், முரளி, பாக்யராஜ் உட்பட பல நடிகர்களின் மகன்கள் இன்று சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது மற்றொரு வாரிசு நடிகரும் திரையுலகில் நுழைவதற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவை தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி எடுத்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரன் தான்.

நடிகை ரோகிணியும், ரகுவரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர்

இவர்களின் மகன் ரிஷிவரன் தன் தாய் ரோகிணியிடம் தான் வளர்ந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரகுவரன் மரணம் அடைந்தார் அப்போது அவருடைய மகன் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது. ஆனால் ரோகிணி தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

இந்நிலையில் ரிஷிவரன் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இவ்வளவு காலம் நடிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்த அவர் தற்போது தன் தந்தையைப் போல நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால் ரோகிணிக்கோ அவர் சினிமாத்துறைக்கு வருவது பிடிக்கவில்லை.

அவர் படித்த படிப்புக்கான வேலையை பார்த்தால் போதும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவரின் மகனும் தன் அப்பாவின் சினிமா வரலாற்றை பற்றி தெரிந்துகொண்டு நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். தற்போது அவர் தன் அப்பாவை போலவே நல்ல உயரத்துடன் அம்சமாக இருக்கிறாராம்.

அவர் இப்பொழுது நடிக்கிறேன் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டால் போதும் அவரை தூக்கிக் கொண்டு செல்வதற்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவர் ஒரு பெரிய இயக்குனரின் திரைப்படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்று நினைக்கிறார்.

இது போக இயக்குனர் மணிரத்னமும் அவரை வைத்து படம் இயக்குவதற்கு தயாராக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் கூடிய விரைவில் ரிஷிவரன் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு என்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!