நிலையான வைப்பு வசதி வீதத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானம்!
#SriLanka
#Central Bank
#Bank
Mugunthan Mugunthan
2 years ago
தொடரும் பொருளாதார நெருக்கடிக்குள், நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நிலையான வைப்புத்தொகை வசதி 6.5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற மத்தியவங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.