இந்த நாட்டில் உள்ள மக்கள் துறைமுக நகருக்குள் நுழைவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை

#SriLanka
இந்த நாட்டில் உள்ள மக்கள் துறைமுக நகருக்குள் நுழைவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை

இந்நாட்டின் எந்தவொரு பிரஜையும் துறைமுக நகருக்குள் இலவசமாக பிரவேசிக்க முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். துறைமுக நகரத்தில் முதலீடு செய்யவும், எந்த விற்பனை நிலையத்திலிருந்தும் பொருட்களை வாங்கவும் மக்களுக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

கொழும்பு துறைமுக நகரில் பண மோசடிக்கு இடமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவடைந்து, முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் என்றும், நிதி நிர்வாகம், வங்கி, முதலீட்டுப் பதிவு மற்றும் அதற்கான விதிமுறைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.