புடின் கூட செய்யாததை சஜித் செய்கிறார்.. அமெரிக்க தூதருடன் சஜித் விஷேட சந்திப்பு
#Sajith Premadasa
Prasu
2 years ago
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜெசாங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இது இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் மதிப்பை வலியுறுத்தினார்.
குறிப்பாக இலங்கையுடன் நிலவும் பொருளாதார, சமூக-கலாச்சார உறவுகள் குறித்து கவனம் செலுத்திய தூதுவர், அது மேலும் வலுவடைவதை தான் நம்புவதாகவும் கூறினார்.