கருக்கலைப்பு: பிரேரணை சமர்ப்பித்தால் ஆராயத் தயார்: நீதி அமைச்சர்

Mayoorikka
2 years ago
கருக்கலைப்பு:  பிரேரணை சமர்ப்பித்தால் ஆராயத் தயார்:  நீதி அமைச்சர்

கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

பலாத்காரமாக துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் பெண்ணின் கருவறையில் உருவாகும் கருவை இல்லாமலாக்குவது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சினை இருந்து வருகின்றது என கூறினார்.

இது மிகவும் கவலைக்குரிய பிரச்சினை என்றும் இந்நிலைக்கு ஆளாகும் பெண், பல்வேறு அசெளகரியங்கள் மற்றும் சமூகத்தில் தாழ்த்தப்படும் நிலை உருவாக்குவதாகவும் சாந்த பண்டார தெரிவித்த நிலையில் இதற்கு பதில் வழங்கும் போதே நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!