மேற்குலக நாடுளின் எண்ணெய் வர்த்தக தடையால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

Mayoorikka
2 years ago
மேற்குலக நாடுளின் எண்ணெய் வர்த்தக தடையால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்துக்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால் உலக சந்தையில் பேரழிவு விளைவுகள் ஏற்படும். இந்தத் தடைகளால் பெற்றோல் விலை ஒரு பீப்பாய் 300 டொலராக உயர வாய்ப்புள்ளது என ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளின் தடை தொடருமானால் ஜேர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம் எனவும் அவா் கூறினார்.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யா மீது விதிக்கக்கூடிய மேலும் சில தடைகள் குறித்து விவாதித்து வருகின்றது. ஆனால், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள் இந்த ஆலோசனைகளை நேற்று நிராகரித்தன.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த எரிவாயுவில் 40% மற்றும் அதன் எண்ணெய் கொள்முதலில் 30 வீதத்தை ரஷ்யாவிடமிருந்துதான் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகத்தை நீங்கள் நிராகரிக்க விரும்பினால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எரிசக்தி விநியோக மாற்று வழிகள் குறித்து நாங்கள் ஆராய்வோம் என ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறினார்.

தடை தொடருமானால் ஜேர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!