இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எடுத்துள்ள அமைச்சரவை தீர்மானம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் வாராந்த பொருளாதார சபையை கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, உள்ளுர் பொருளாதார கொள்கைகளை ஆழமாக கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்துவதே இந்த பொருளாதார சபை கூட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கலில் அமெரிக்க டொலர் அதிகபட்சமாக 230 ரூபா வரை உயர்வடையும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
எனினும், டொலரின் பெறுமதி அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.