உக்ரைன் இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் : வெளியான தகவல்!
Mayoorikka
2 years ago
உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உக்கிரமடைந்து வரும் நிலையில் தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை இராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது