அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 09.03.2022

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Reha
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 09.03.2022

மேஷம்: 
அசுவினி: பணம் வந்தாலும் சேமிக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
பரணி: உங்கள் மீது வீண்பழி ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
கார்த்திகை 1: பயணம் செல்ல நேரிடலாம். முயற்சியில் வெற்றி உண்டு.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பிறருக்கு உதவி செய்வதால் உங்களுக்கு நல்லபெயர் கிடைக்கும்.
ரோகிணி: வாழ்க்கைத்துணையின் முயற்சி மூலம் லாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: பிறரது பொருளைக் கையாளுவதில் கவனமாக இருங்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும்.
திருவாதிரை: உங்களை பகைத்துக் கொள்ள நினைப்பவர்கள் மனம் மாறுவார்கள்.
புனர்பூசம் 1,2,3: முன்பு உங்களுக்கு வாக்குக் கொடுத்தவர்கள் இன்று நிறைவேற்றுவர்.

கடகம்: 
புனர்பூசம் 4: வேலைச்சுமை குறையும். நிம்மதிக்கான சூழல் நிலவும்
பூசம்: எந்த செயலையும் முனைப்புடன் செய்யும் சிரத்தை வளரும் .
ஆயில்யம்: சில விஷயங்களை அவசரமாக முடிக்க வேண்டி வரும்.

சிம்மம்: 
மகம்: நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். வேற்று மதத்தவர் நன்மை செய்வர்.
பூரம்: எதிர்பாலினத்தவர் அளிக்கும் உதவி வெற்றிக்கு வழிவகுக்கும்.
உத்திரம் 1: தாமதத்தைக் குறைத்து பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நீங்கள் புகழ் அடைவீர்கள். பணிவாக நடந்து பிறரை வியப்பூட்டுவீர்கள்.
அஸ்தம்: உங்களுக்கு உதவி செய்ய தயங்கியவர்கள் உங்கள் உதவியை நாடி வருவர்.
சித்திரை 1,2: தடைபட்ட சுப விஷயம் ஒன்று இப்போது கூடிவரும்.

துலாம்: 
சித்திரை 3,4: நண்பர்களுக்காக மத்தியஸ்தத்தில் ஈடுபட வேண்டாம்.
சுவாதி: குழப்பத்திற்கு தீர்வு காண அனுபவமிக்கவரின் உதவி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: பயம், குழப்பம் நீங்கும் படியான ஆறுதல் வார்த்தை கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சமூகத்தில் நல்ல விஷயங்கள் செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.
அனுஷம்: உயர் பதவியில் இருப்பவர்களின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.
கேட்டை: பணியில் உள்ள ஈடுபாட்டால் முன்னேற்றம் அடைவீர்கள்.

தனுசு: 
மூலம்: பெற்றோர் விரும்பிய சாதனைகளை செய்வீர்கள்.
பூராடம்: உடல் நலம் மேம்படும். நீண்ட நாள் கவலை தீரும்.
உத்திராடம் 1: வீண் அலைச்சல், மருத்துவச்செலவு குறைந்து நிம்மதி வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: நல்ல செயல்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருவோணம்: நற்செயல் செய்து புகழ் அடைவீர்கள். உற்சாகமான நாள்.
அவிட்டம் 1,2: பணியிடத்தில் இருந்த பிரச்னை தீரும். நிம்மதி அதிகரிக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: கவலைகள் தீரும். பிறரிடம் மனம் விட்டு பேச ஆரம்பிப்பீர்கள்.
சதயம்: நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் இன்று முடிவுக்கு வரும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினருடன் ஒருமித்த கருத்து ஏற்படும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்கள் போக்கை மாற்றுவதன் மூலம் நன்மை வரும்.
உத்திரட்டாதி: பழைய பொருட்களை விற்றுப் புதியதை வாங்குவீர்கள்.
ரேவதி: திறமையாக செயல்பட்டு பாராட்டு வாங்குவீர்கள். நண்பர்கள் சந்திப்பு ஏற்படும்.