அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 10.03.2022

Reha
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 10.03.2022

மேஷம்: 
அசுவினி: புதிய அணுகுமுறைக்கு அதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
பரணி: மற்றவர் செயலால் உங்கள் நேரம் விரயமாகக்கூடும்.
கார்த்திகை 1: செலவுகளைக் குறைத்து சேமிக்கும் கலையை கற்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: கனவு நனவாகும் நாள். நல்லவர்கள் வலிய வந்து நட்பாவார்கள்.
திருவாதிரை: மகிழ்ச்சியான நாள். தைரியம் அதிகரிப்பதால் சாதிப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: எடுத்த விஷயத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: மற்றவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும்.
பூசம்: மற்றவர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
ஆயில்யம்: புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களால் ஏற்றம் உண்டு.

சிம்மம்: 
மகம்: சக ஊழியருடன் ஏற்பட்டிருந்த பிரச்னை தீர்ந்து நட்பாவீர்கள்.
பூரம்: எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு நீங்கும். பயம் தீரும்.
உத்திரம் 1: காலையில் இருந்தே நடக்கும் நிகழ்ச்சியால் மனம் நிறைவடையும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: தாயின் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படும்.
அஸ்தம்: குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும். பணியில் அக்கறை கூடும்.
சித்திரை 1,2: உறவினரால் ஆதாயம் உண்டு. தைரியம் அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் உங்களுக்கு உதவுவர்.
சுவாதி: உங்களது பெயர் கெடாமல் இருக்க பேச்சில் கவனம் தேவை.
விசாகம் 1,2,3: எதிர்கால வாழ்வில் இருந்த பயம் நீங்கி உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள்

விருச்சிகம்: 
விசாகம் 4: மகிழ்ச்சியும், நிம்மதியும் முன்பை விடப் பெருகும்.
அனுஷம்: போலியான மனிதர்கள் யாரென்று கண்டறிந்து அவர்களை விலக்குவீர்கள்.
கேட்டை: வழக்கமில்லாத புதிய விஷயத்தில் உங்களுக்கு புரிதல் ஏற்படும்.

தனுசு: 
மூலம்: குடும்பத்தினருடன் பேசும் போது கவனம் தேவை.
பூராடம்: வெளிநாட்டில் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும்.
உத்திராடம் 1: புதிய நபர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பழக வேண்டாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பெற்றோரின் மனம் சந்தோஷப்படும் விதத்தில் நடப்பீர்கள்.
திருவோணம்: நண்பர்களின் சிரமம் உங்களுக்கும் வருத்தத்தை தரும்.
அவிட்டம் 1,2: பணியில் கூடுதல் அக்கறை செலுத்தி வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம் 1: புதிய நபர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பழக வேண்டாம்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: இன்று மாலை வரும் செய்தியால் உற்சாகம் ஏற்படும்.
சதயம்: திடீரென்று சந்திக்கும் நபர் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
பூரட்டாதி 1,2,3: நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களிடம் மனம்விட்டுப் பேசுவார்.

மீனம்: 
பூரட்டாதி 4: நீங்கள் எதிர்பார்த்த விஷயம் நல்லபடியாக முடியும்.
உத்திரட்டாதி: பழைய நட்பை கொண்டாடுவீர்கள். பயம் நீங்கும்.
ரேவதி: இளைய சகோதரரின் செயலால் குடும்பத்திற்கே நன்மை உண்டு.