டீசலின் நாளாந்த தேவை 2500 மெற்றிக் தொன்களுக்கும் மேல் அதிகரிப்பு

Prathees
2 years ago
டீசலின் நாளாந்த தேவை 2500 மெற்றிக் தொன்களுக்கும் மேல் அதிகரிப்பு

விலை அதிகரிக்கப்பட்டாலும் டீசல் விற்பனையால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் நட்டத்தை சந்திக்க நேரிடும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் நேற்று நள்ளிரவு செய்யப்பட்ட திருத்தத்தின் போது டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், விலைகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

பெப்ரவரி மற்றும் அதற்கு முந்திய காலப்பகுதியில் பெற்றோலுக்கான நாளாந்த தேவை 1000 மெற்றிக் தொன்களால் அதிகரித்துள்ளதாகவும் டீசலின் நாளாந்த தேவை 2500 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.