இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் நடவடிக்கை

#Mahinda Rajapaksa #Meeting #Prime Minister
Prathees
2 years ago
இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் நடவடிக்கை

இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கான தடைகளை அகற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஇ  அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

அகில இலங்கை கலாசார தெலுங்கு கலைஞர்கள் சங்கத்துடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் தெலுங்கு மக்களின் தலைவர் கே.ஆர்.அனவத்து மற்றும் நாடளாவிய ரீதியில் தெலுங்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பிரதிநிதிகள், தெலுங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விளக்கினர்.

பிரதமர் அப்போது மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தபோது எங்களுக்காக 125 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.மக்கள் தொகை அதிகரித்தது. தற்போது ஏழு கிராமங்கள் உள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம் 2015 வரை எம்மை நோக்கியது. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் கடந்த அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை.

தற்போது எமது குடியிருப்புகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளது” என இலங்கையின் தெலுங்கு மக்களின் தலைவர் தெரிவித்தார்.

சுமார் மூன்று மாத காலத்திற்குள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இதன்படி இரண்டாம் தலைமுறைக்கு தேவையான காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒழுங்குமுறையின் ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் உரிய பகுதிகளுக்குச் சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

பிரதேச செயலாளர் ஊடாக வீட்டுத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கு மக்கள் பிரதிநிதிகளிடம் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

தெலுங்கு கிராமங்களில் வீதிகள் அமைப்பது, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமுர்த்தி சலுகைகள் வழங்குவது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெலுங்கு கலாசார கூறுகளை முன்வைப்பவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் உரிய நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெலுங்கு மக்களின் கலாசார அம்சங்களை வழங்குவதில் உள்ள தடைகளை நீக்கவும் பிரதமர் அறிவுறுத்தினார்.