118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

Prathees
2 years ago
118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உரிய வகையில் இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதியில் இருந்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றம் பெறவுள்ள்ளார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக கடமையாற்றிய ஆனந்தராஜா யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றம் பெற்றுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக கடமையாற்றும் ரீ.கருணாகரன் வாழைச்சேணை மாவட்ட நீதிவானாக மாற்றம் பெறவுள்ளார். 

மன்னார் மாவட்ட நீதிவான் பீ.சிவகுமார் மல்லாகம் மாவட்ட நீதிவானாக இடமாற்றம் பெறவுள்ளார். 

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சீ.றிஸ்வான் பொத்துவில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெறவுள்ளார். 

வாழைச்சேணை மாவட்ட நீதிபதி எம்.எம் பசீல் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக மாற்றம் பெறவுள்ளார்.

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஜீ.சைலயன் மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவானாக இடமாற்றம் பெறவுள்ளார். 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றலாகி செல்லவுள்ளார்.

பொத்துவில் மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.றவி கண்டி நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக செல்லவுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!