நீர்கொழும்பில் 84 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது!
#Arrest
Prathees
2 years ago
நீர்கொழும்பு - லெல்லம பிரதேசத்தில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட ஒருதொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (13) காலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 570 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 84 மில்லியன் ரூபா வரை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.