சியால்கோட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 89 பேர் மீது பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

#Pakistan
Prathees
2 years ago
சியால்கோட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 89 பேர் மீது பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு சியால்கோட்டில் இலங்கை பிரஜை பிரியந்த குமார தியவதனகே படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 89 நபர்கள் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த டிசம்பர் 3, 2021 அன்றுஇ சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் மேலாளராக இருந்த குமார, (49 வயது)இ அவரது தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொண்ட ஒரு கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல் அவரை சித்திரவதை செய்து கொன்று பின்னர் அவரது உடலை எரித்துள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

தொழிற்சாலையில் உள்ள 10 டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்களில் இருந்து காட்சிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

 அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் 56 குற்றவாளிகளின் மொபைல் போன்களில் இருந்து மீட்கப்பட்ட காட்சிகள் மூலம் குறித்த சம்பவம் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக  அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!