அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.03.2022

#Astrology
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.03.2022

மேஷம்: 
அசுவினி: நண்பர்களால் உதவி கிடைக்கும். குழந்தைகளின் உடல்நலம் பற்றிய பயம் வேண்டாம்.
பரணி: புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நல்லவர்கள் அவசரத்திற்கு உதவுவர்.
கார்த்திகை 1: பணியிடத்தில் உற்சாகம் கூடும். உடல் அசதி குறையும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: அனுபவசாலிகளின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள்.
ரோகிணி: எதிர்காலம் கருதி திட்டமிட்டு உழைப்பீர்கள். சேமிக்க வாய்ப்புண்டு.
மிருகசீரிடம் 1,2: ஆடம்பர சிந்தனை மேலோங்கும். பணம் அதிகம் செலவழியும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: அதிகாரியுடன் இணக்கமான சூழல் உருவாகும். கடனுதவி கிடைக்கும்.
திருவாதிரை: வெகுளியாய் இருந்த உங்களுக்கு முன்னேறும் சாமர்த்தியம் அதிகரிக்கும்.
புனர்பூசம்: 1,2,3: இன்றைய செயல்பாடு எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

கடகம்
புனர்பூசம் 4: உங்கள் திறமையை மற்றவர்கள் முன்னிலையில் நிரூபிப்பீர்கள்.
பூசம்: குடும்பத்தில் தள்ளிப்போன முடிவுகளை இன்று எடுத்து நன்மை அடைவீர்கள்.
ஆயில்யம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளால் மனநிறைவு ஏற்படும்.

சிம்மம்: 
மகம்: முக்கிய விஷயத்தில் எதிர்பாராதவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம்: நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவர். நீண்டநாள் கவலை நீங்கும்.
உத்திரம் 1: பிறரிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள்.

கன்னி
உத்திரம் 2,3,4: நட்பு விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள். உற்சாகம் கூடும்.
அஸ்தம்: பிள்ளைகளின் விஷயத்தில் சுபவிஷயம் பற்றிய பேச்சு தொடங்கும்.
சித்திரை 1,2: மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும்

துலாம்
சித்திரை 3,4: பணியிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திறம்பட செயல்படுவீர்கள்.
சுவாதி: பணியாளர்களுக்கு மேலிட ஆதரவு கிடைக்கும். சுபசெய்தி வந்து சேரும்.
விசாகம் 1,2,3: தொழிலில் லாபம் கூடும். புதிய கோணத்தில் சிந்தித்து வெற்றியடைவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: அசையா சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரை மகிழ்விப்பீர்கள் .
அனுஷம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியில் இடமாற்றம் கிடைக்கும் .
கேட்டை: பிரச்னை நீங்கி நிம்மதி பிறக்கும். நல்லவர் ஆதரவால் முன்னேறுவீர்கள்.

தனுசு
மூலம்: புதிய நட்பால் பிரச்னை ஏற்படாமல் இருக்க கவனமாக இருங்கள்.
பூராடம்: குடும்பம், பணியிடத்தில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம்.
உத்திராடம்1: சுபவிஷயம் பேசுவீர்கள். உறவினர் வருகையால் கலகலப்பு உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2,3,4: நீங்கள் பல வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டியிருக்கும்.
திருவோணம்: மேலதிகாரி உங்கள் திறமையைக் கண்டறிந்து பரிசளித்து மகிழ்வர்
அவிட்டம் 1,2: நண்பர்களிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்
அவிட்டம் 3,4: குழந்தைகள் வகையில் செலவு அதிகரிக்கும். அலைச்சலால் அசதி உண்டாகலாம்.
சதயம் : பதற்றமோ அவசரமோ வேண்டாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
பூரட்டாதி1,2,3: மறைமுக எதிரிகளின் தொல்லையை சமாளிப்பீர்கள். மோதல் போக்கு வேண்டாம்.

மீனம்
பூரட்டாதி 4: குடும்பத்தில் நிதானமாக போராடி வெல்வீர்கள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.
உத்திரட்டாதி: முயற்சியில் தாமதம் ஏற்படும். நண்பர்களால் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
ரேவதி: சுபச்செலவு மகிழ்ச்சி தரும். யாருடைய வாக்குறுதியை நம்பியும் ஏமாற வேண்டாம்.