இலங்கையில் நீண்ட நேர மின்சார தடை! ATM பயன்படுத்துவோருக்கும் சிக்கல்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் நீண்ட நேர மின்சார தடை!  ATM பயன்படுத்துவோருக்கும் சிக்கல்!

ATM இயந்திரங்களில் மக்கள் பணத்தை பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது.

மின்சார தடை காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் அட்டையை செலுத்திய பின்னர் இயந்திரம் செயலிழந்து விடுவதாக தெரியவந்துள்ளது. இதனால் பணமும் அட்டையும் இயந்திரத்தில் சிக்கிக் கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவதாக மின்சாரம் தடைப்பட்டால், ஜெனரேட்டர் இயங்கும் வரை இயந்திரம் செயற்படும் வகையில் UPS பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் வங்கியிடம் வினவும் போது UPS உடைந்து விட்டதாகவும் மக்கள் அதிகமாக வருவதனால் ஒன்றும் செய்ய முடியாதெனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தையும் பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது நீண்ட நேர மின்சார தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏனைய பிரதேசங்களிலுள்ள ATM இயந்திரங்களிலும் இவ்வாறான நிலை ஏற்படலாம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவசர தேவையின் நிமித்தல் பணப்பரிமாற்றம் செய்வதற்கு இது பெரும் தடையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது எந்தவொரு பொருட்களையும் சேவையையும் பெற்றுக்கொள்வது என்றாலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.