இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

Mayoorikka
2 years ago
இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

இலங்கை ஏற்கனவே வங்குரோத்து நிலையில் இருப்பதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் போதுமான டொலர்கள் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாடு கடுமையான டொலர் பற்றாக்குறையில் இருக்கும்போது, இலங்கைக்கு பொருட்களை எடுத்து வந்துள்ள கப்பல்களுக்கு நாள் ஒன்றுக்கு 18ஆயிரம் டொலர் தாமதக்கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.

இதுவரை காலத்தில் இரண்டு கப்பல்களுக்கு 3லட்சத்துக்கு 60ஆயிரம் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய மக்கள் போராட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவின் ஆதரவாளா்கள் மற்றும் கடந்த தேர்தலில் அந்தக்கட்சிக்கு நிதியுதவி செய்தவர்களும் பங்கேற்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைத்த கோட்டாபய ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் நாட்டை நடத்திச்செல்லமுடியாது என்பதை வலியுறுத்தியே அவர்கள்  போராட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் நடத்திய சந்திப்பின்போது, நாட்டை மீட்டெடுக்கும் திட்டங்கள், அரசாங்கத்திடம் இல்லை என்பது தெரியவந்தது.

500 மில்லியன் டொலர்களுக்காக திருகோணமலை எரிபொருள் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர்களுக்காக அரசாங்கத்தினால் எவை வழங்கப்படபோகின்றன என்பதை எதிர்காலத்தில் பார்க்கமுடியும்.