மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து கப்ரால் நீக்கப்பட மாட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் மீது தமக்கு அதிகபட்ச நம்பிக்கை இருப்பதாகவும், நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார சவால்களுக்கு பதிலளிப்பதில் பலம் வாய்ந்த சக்தியாக அவர் செயல்படுவார் என்றும் ஜனாதிபதி கூறுகிறார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அதிகாரிகள் தொடர்பில் கலந்துரையாடவில்லை எனவும் நிதி விடயங்கள் மாத்திரமே கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளர வேண்டாம் என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் அனைத்து முக்கியப் பங்காற்றுமாறும் மத்திய வங்கி ஆளுநருக்கு தாம் தனிப்பட்ட முறையில் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.