ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்
Mayoorikka
2 years ago
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யக்கூடிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.