'நான் சிறந்ததைச் செய்தேன்' என்று கூறிய ஜனாதிபதி இப்போது 'நான் ஒன்றும் செய்யவில்லை' என்று கூறுகிறார்: புபுது ஜயகொட
"நான் சிறந்ததைச் செய்தேன்" என்று கூறிய ஜனாதிபதி இன்று "நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நான் உருவாக்கியது அல்ல. அவற்றை ஏற்படுத்த நான் எதுவும் செய்யவில்லை என கூறுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட நேற்று (17) தெரிவித்தார்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நெருக்கடிகளை யார் உருவாக்கினாலும் அதனை தீர்க்க அரச ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள் எனவும் ஜயகொட தெரிவித்தார்
நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவ்வாறான தீர்வோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உத்தியோ ஜனாதிபதியால் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
ஜனாதிபதி எதற்காக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்பது நாட்டிற்கு தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை முன்வைக்காத ஜனாதிபதி மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு கூறுகின்றார்.
எரிபொருள் விலை அதிகமாக இருக்கும் போது, மக்கள் அவற்றை வீணாக பயன்படுத்துவதில்லை. வீடுகள் பந்தல் போல் எரிவதில்லை.
அமைச்சர்கள் போன்று மக்கள் மின்கட்டணமாக ரூ.10 ஆயிரம் பெறவில்லை. எனவே இவை பயனற்றவை. என அவர் மேலும்தெரிவித்தார்.