அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 18.03.2022

#Todayrasipalan #Dailyrasipalan #Rasipalan
Reha
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 18.03.2022

மேஷம்: 
அசுவினி: எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றம் பெறுவீர்கள்.
பரணி: மற்றவர்களுக்கு உங்கள் மேல்இருந்த நல்ல அபிப்ராயம் கூடும்.
கார்த்திகை 1: கடந்த சில நாளில் தொடங்கிய முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கோயிலுக்கு சென்று வருவீர்கள்,மன அமைதி கிடைக்கும்.
ரோகிணி: நீண்ட காலத்தேவை ஒன்று நிறைவடையும். கடன் குறையும்.
மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் முன்னேற்றம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நல்ல நோக்கத்துடன் எடுக்கும் முடிவு மற்றவரால் பாராட்டப்பெறும்.
திருவாதிரை : மற்றவரிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தில் பழையபிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். நிம்மதி தரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: உறவினரிடம் இருந்து வியக்கும் படியான செய்தி வரும்.
பூசம்: எதையும் நிதானித்து செய்வதால், இன்று நன்மை அடைவீர்கள்.
ஆயில்யம்: வெளி நாட்டு வேலை முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: எடுத்த வேலை இனிதே முடிவடையும். பணம் கணிசமாக கிடைக்கும்
பூரம்: உழைப்பைக் கூட்டி மகிழ்ச்சியைக் அதிகரித்துக் கொள்வீர்கள்.
உத்திரம் 1: உங்களுடைய குடும்பத்தில் கலகலப்பு நிலவும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பிள்ளைகளிடமிருந்து பிரச்னை வரும். சமாளிப்பீர்கள்.
அஸ்தம் : யாருடனும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1,2: நண்பர்களால் நன்மையும், லாபமும் உண்டு. மகிழ்ச்சி கூடும்.

துலாம்: 
சித்திரை 3,4: குடும்ப நண்பர்களுக்கு உங்களால் நன்மை உண்டாகும்.
சுவாதி: இன்று வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
விசாகம் 1,2,3: இத்தனை நாள் இருந்து வந்த மனபயம் நீங்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள். அமைதி நிலவும்.
அனுஷம்: வீண்விசயங்களை அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டாம்.
கேட்டை: அனுபவசாலிகளின் ஒத்துழைப்பால் தன்னம்பிக்கை கூடும்.

தனுசு: 
மூலம்: செயல் திறன்அதிகரிக்கும். பிரச்னைகளிலிருந்து ஒதுங்கியிருப்பீர்கள்.
பூராடம்: பொது சேவைகளை முன்னின்று நடத்திப் புகழ் பெறுவீர்கள்.
உத்திராடம் 1: பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பயம் நீங்கி எதையும் சமாளிக்கும் திறன் வளரும் நாள்.
திருவோணம் : தொழிலில் முன்னேற்றங்கள் சற்று மந்தமாக இருக்கும்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் அவசியமற்ற செலவுகளை குறைப்பது நல்லது.

கும்பம்: 
அவிட்டம் 3,4: முயற்சியில் சிறு தடை உண்டாகக் கூடும்.பொறுமை அவசியம்.
சதயம்: உங்களது பேச்சு,செயலால் தீங்கு விளையாமல் கவனமாயிருங்கள்.
பூரட்டாதி 1,2,3: கூடுதலான பணவரவு உண்டு. சேமிப்பு கூடும் .

மீனம்: 
பூரட்டாதி 4: குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
உத்திரட்டாதி : நன்மை கிடைப்பதற்குச் அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
ரேவதி : குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.