யாழில் தாய்ப்பால் புரையேறியதில் 8 மாத பெண் குழந்தை மரணம்!
#SriLanka
Nila
2 years ago
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்திற்கு சென்றிருந்த 8 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
பால் புரையேறியமையே உயிரிழப்புக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.
வட்டுக்கோட்டை அராலி வடக்கை சேர்ந்த யோகசீலன் கிருத்திகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்று அதிகாலை தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை அதிகாலை 4.30 மணியளவில் அசைவற்று காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழுந்தை ஏற்கனவே உயிரிழந்தமையினை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.