எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Mayoorikka
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு இன்று காலை கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 பேர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்கின்றோம் என்ற போர்வையில்  வந்த  ஐந்து கொள்ளையர்கள், ஊழியர்களை அணுகி, முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையர்கள் தொடர்பாக பல முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!