இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்:
#Food
Mayoorikka
2 years ago
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் உள்ளூர் பழங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் எச்சரித்துள்ளது. இந்த பருவத்தில் மரக்கறி நுகர்வு அதிகரிப்பதன் காரணமாக மரக்கறி விலைகளும் அதிகரிக்கலாம் என அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நெல் விலை அதிகரிப்பால் எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பால் பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 9 உணவுகளுக்கான வரியை மேலும் அதிகரிக்க நிதியமைச்சு நேற்று தீர்மானித்துள்ளது. அவற்றில் திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பிற இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் உள்ளன.