ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டோரினால் பதற்றம்!

#Protest
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டோரினால் பதற்றம்!

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

காலி வீதியில்,  லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.    

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், யுகதனவி ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!