சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

#SriLanka #Power
Prasu
2 years ago
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நாளை (19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த வலயங்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

இதேவேளை, P, Q, R, S, T, U, V, W வலயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்

அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்க்ளில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த வலயங்களில் மாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!