அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.03.2022

#Todayrasipalan #Dailyrasipalan #Rasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.03.2022

மேஷம்
அசுவினி: இன்று இடமாற்றம் பற்றிய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
பரணி: தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள், விருப்பம் நிறைவேறும்
கார்த்திகை 1: வேறு இடத்திற்குரிய பணி மாற்றத்திற்கான சிந்தனை மேலோங்கும் .

ரிஷபம்
கார்த்திகை 2,3,4:அரசாங்க விஷய முயற்சியில் நற்பலன் கிடைக்கும்.
ரோகிணி : பண விவகாரத்தில் வந்த சிக்கல் அகலும். நிம்மதி அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: விருப்பம் நிறைவேறப் பாடுபட வேண்டியிருக்கும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: ஆபரணச் சேர்க்கை உண்டாகி சந்தோஷம் கூடும்.
திருவாதிரை : குடும்பத்தினரிடம் திருப்தியான மனநிலை காணப்படும்.
புனர்பூசம் 1,2,3 : ஆடம்பர பொருட்கள் சேரும். உற்சாகம் அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : உடல் நலன் கருதி ஆரோக்யமான உணவுகளை உண்பீர்கள்.
பூசம்: குடும்பத்தில் ஒருவரின் உடல் நலம் சீராகும்.கோவிலுக்கு செல்வீர்கள்.
ஆயில்யம்: தேவையற்ற பொருள் வாங்குவதால் வீண்செலவு ஏற்படலாம்.

சிம்மம்
மகம்: வெளிநாட்டுக் கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பூரம்: நினைத்ததை நடத்தி முடிக்க, நெருங்கிய நபர் கைகொடுப்பார்.
உத்திரம்1: குழந்தைகளை பற்றிய சிறுகவலை வந்து போகும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குடும்பத்தில் ஆரோக்ய தொல்லை ஏற்பட்டு மறையும்.
அஸ்தம்: சொந்தத் தொழிலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
சித்திரை 1,2:குடும்பத்தில் ஒருவருக்குத் தடைபட்ட திருமணம் கூடும்.

துலாம்
சித்திரை 3,4 : மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள்.
சுவாதி : உறவினருடன் வருத்தம் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3 : பொது வாழ்வில் ஈடுபடுவதால் செல்வாக்கு, புகழ்கூடும்.

விருச்சிகம்
விசாகம்,4 : பல நாள் பிரச்னைக்குப் புதிய தீர்வு புலப்படும்.
அனுஷம் : குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள்.
கேட்டை : இமெயில் ஒன்றில் மகிழ்ச்சியான தகவல் வரும்.

தனுசு
மூலம் : எதிர்பார்த்த வாய்ப்பு ஒன்று வருவதில் சிறு தடை இருக்கும்.
பூராடம் : விலை உயர்ந்த பொருட்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.
உத்திராடம்1: விரும்பிய பணி மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும்

மகரம்
உத்திராடம் 2,3,4: பொறுப்பாக பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
திருவோணம் : பிறர் மீது பொறாமை உள்ளோர் சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
அவிட்டம்1,2 : அசையாச் சொத்தில் முதலீடு செய்ய ஆர்வம் அதிகரிக்கும்

கும்பம்
அவிட்டம் 3,4: கடந்த ஓரிரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும்
சதயம்: எதிர்பார்த்த நன்மை கைநழுவிச் சென்றால் கவலை வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: நம்பிக்கை குரியவரின் செயலால் ஏமாற்றம் அடைவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : இன்று மந்தப்போக்கை நீக்கி நிதானத்தை கடைப்பிடிப்பீர்கள் .
உத்திரட்டாதி : தைரியத்தை கை விட வேண்டாம். பணிச்சுமை குறையும்.
ரேவதி : கோபத்தைக் கைவிடவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நாள்.