மார்ச் மாதத்தில் பணவீக்கம் 25 சதவீதமாக உயரும் என கணிப்பு ...

Prabha Praneetha
2 years ago
மார்ச் மாதத்தில் பணவீக்கம் 25 சதவீதமாக உயரும் என கணிப்பு ...

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் பணவீக்கம் சுமார் 25 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் உணவுப் பணவீக்கம் 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என்று அவர் கணித்துள்ளார். இலங்கையின் பணவீக்கம் பெப்ரவரியில் 16.8 வீதமாக உயர்ந்துள்ளது, இது ஆசியாவிலேயே அதிகூடியதாகும்.

 கலாநிதி பிரியங்க துனுசிங்க, இம்மாதம் பல பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் பொருட்களின் விலைகள் மேலும் பல சுற்றுகளில் அதிகரிக்கலாம் எனவும் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!