கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு தேவை-சுகாதார அமைச்சு
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது கடமைகளைச் செய்ய வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறுகையில், சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இருக்கலாம் ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் இன்னும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக விசேட வைத்தியர் டாக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று மேலும் 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 57,723 ஆக அதிகரித்துள்ளது. அதில் 24,521 பேர் குணமடைந்துள்ளனர்.
16,780 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதுடன், இலங்கையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,422 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.