யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!
காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன .
நெடுந்தீவு - 11ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த அமலதாஸ் டென்ஜின்ரீனா என்ற பெண் குழந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சலுடன் கூடிய வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் உடனடியாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டது.
எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்கு சடலம் உத்தரவிடப்பட்டுள்ளது.