மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்தவர் மரணித்த சம்பவம் - இலங்கை அரசு இனியாவது சிந்திக்குமா...?
#SriLanka
Nila
2 years ago
கண்டியில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீண்ட நேரமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
காலையில் இருந்து மழையில் நனைந்த நிலையில் மண்ணெண்ணெய் பெற காத்திருந்த போதே குறித்த நபர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
அங்கிருந்த மக்களை அவருக்கு நீர் கொடுத்து காப்பாற்ற முயற்சித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.