மின் உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு!
#Power
#government
#Lanka4
Reha
2 years ago
மின் உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஏ முதல் எல் வரையான வலயங்களில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலமும், 15 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில், 2 மணிநேரமும்,
மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் பி முதல் டபிள்யு வரையான வலயங்களில் இன்று மாலை 4.30 முதல் இரவு 9.30க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.