ஐ.நா சபையின் முக்கிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தமிழர்!
ஐ.நா சபையின் முக்கிய ஆலோசனைக் குழுவில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (Tharman Shanmugaratnam) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய உயர்மட்ட பலதரப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகத் தலைவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் ஆகிய 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இது காணப்படுகின்றது.
உலகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை குழு ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கும்.
இந்தப் பரிந்துரைகள் 2023 இல் நடைபெறவுள்ள ஐ.நா உறுப்பு நாடுகள் பங்கேற்கும் உத்தேச எதிர்கால உச்சநிலை மாநாட்டில் தெரிவிக்கப்படும்.
ஐ.நா சபையில் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் புதிய ஆலோசனைக் குழு பற்றிய விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளார்.
“புதிய குழுவுக்கு ஐ.நா பல்கலைக்கழகக் கொள்கை ஆய்வு நிலையம் ஆதரவு வழங்கும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகள் வலுவான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று குட்டெரஸ் வலியுறுத்தி இருந்தார்.