ரூபாய் மாற்றத்தால் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டம்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட பிரேரணை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை அண்மையில் தமது ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுகள் தற்போது தமது ஆணைக்குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ரூபாவின் பெறுமதியின் காரணமாக மாற்று வீதத்தை சுதந்திரமாக மாற்றியமைக்க மத்திய வங்கியின் தீர்மானத்துடன் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இலங்கை மின்சார சபையினால் மேலும் பல திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் செலவு அடிப்படையிலான கட்டண முறை அறிமுகப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.