எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் பயன்பாடு 250 மெட்ரிக் டன்கள் அதிகரிப்பு
Prabha Praneetha
2 years ago
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாட்டில் அண்மைக் காலத்தில் சராசரியாக தினசரி மண்ணெண்ணெய் நுகர்வு சுமார் 600 மெட்ரிக் டன்னாக இருந்தது.
தற்போது மண்ணெண்ணெய் தினசரி நுகர்வு 850 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட எரிவாயுவில் 2/3 பங்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் நேற்று 70,000 கேஸ் சிலிண்டர்களையும், அதற்கு முந்தைய நாள் 100,000 கேஸ் சிலிண்டர்களையும் அறிமுகப்படுத்தியதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, தீவுக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு டேங்கர்களை விரைவில் விடுவிக்காவிட்டால் இன்னும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.