எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரிதாபமாக பலியான நான்காவது நபர்!
மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் வரிசையில் நின்று மூன்று எரிபொருள் கான்களை எடுத்துச் செல்லும் போது தவறி விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் வரிசையில் இருந்து மூன்று எரிபொருளை கான்களை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த நபர் இரண்டு கான்களை எடுத்து முச்சக்கரவண்டியில் வைத்துள்ளார்.
மூன்றாவது கானை எடுத்துச் செல்லும் போது கீழே தவறி விழுந்துள்ளார்.
அவரை, பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் மீட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிலையமொன்றில் இடம்பெற்ற கத்தி குத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.