இலங்கை ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து ஆலோசிக்கின்றாரா??
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.
ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஊடகங்களுக்கு இதை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் சில குழுக்களால் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அரசாங்க உறுப்பினர்களுடனும் நாளை (22) கூட்டமொன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் 23 புதன்கிழமை சர்வகட்சி மாநாட்டை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.