நாட்டில் மற்றுமொரு சேவையின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது!
Mayoorikka
2 years ago
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன.
இலங்கையில் தற்போது தினந்தோறும் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தொலைபேசி கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் இவ்வாறு தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை உயர்த்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.