தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்களை அதிகரித்துள்ளது.
#SriLanka
#International
#prices
Mugunthan Mugunthan
2 years ago
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) சர்வதேச தொலைபேசி அழைப்பு அல்லது IDD கட்டணங்களை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக IDD கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளன.
இதன்படி, டொலரின் மாற்றத்திற்கு ஏற்ப IDD கட்டணத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உள்ளூர் அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.